மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக மக்களுக்கு குளிர்ச்சியான செய்தி! வானிலை மையம் அறிவிப்பால் குஷியான தமிழக மக்கள்!
தமிழகத்தில் கடந்த மாத துவக்கத்தில் இருந்தே சுட்டெரிக்கும் வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் கடந்த 30 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால் திசை மாறி ஒடிசாவில் கரையை கடந்தது. அங்கு புயல் ஒடிசாவை சூறையாடியது.
தமிழகத்தில் ஃபானி புயலால் மழை பெய்யும் என எதிர்பார்த்து வந்தநிலையில் புயல் ஒடிசாவுக்கு சென்றதால் வழக்கம்போல் தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய பத்து மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் சனிக்கிழமை வரை பல பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேசமயத்தில் சில இடங்களில் வெயிலும் அடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.