இங்கு யார் முட்டாள் என்றே தெரியவில்லை..! வேற லெவல் தந்திரம்.! மக்களிடம் டோக்கனை கொடுத்து நாமத்தை போட்ட வேட்பாளர்.!



people-schocked-for-grocery-tocken

ஓட்டுக்குப் பணம் வாங்கக்கூடாது என எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் செயலுக்கும், பணம் வாங்கும் செயலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல இடங்களில் பணம் விளையாடியுள்ளது.

பல இடங்களில் பணப்பட்டுவாடா புகார்கள் வெளியானது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது. அதாவது அப்பகுதியில் 2000 ரூபாய் டோக்கன்கள் தேர்தல் நாளுக்கு முன்தினம் காலை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

tocken

அந்த டோக்கனில் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள பிரியம் மளிகைக் கடையில் டோக்கனை கொடுத்து மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொள்ள வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனை பெற்றவர்கள் அந்தக் கடைக்கு நேற்று காலை சென்று மளிகைப் பொருட்கள் கேட்டுள்ளனர். டோக்கனுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கடைக்காரர் கூறியுள்ளார்.

ஆனாலும் டோக்கன் வாங்கியவர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இதையடுத்து மளிகை கடையை பூட்டி கடையின் கதவில், வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனுக்கு கடை நிர்வாகம் எந்தவிதமான பொறுப்பும் ஏற்காது என கதவில் ஒட்டி விட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார் கடை உரிமையாளர்.