எளிதானது இ பாஸ் நடைமுறை! மீண்டும் சென்னையை நோக்கி படையெடுக்கும் வெளி மாவட்ட மக்கள்!



peoples travell to chennai from other district


கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்ற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய பொதுமக்கள் வலுயுறுத்தி வந்தனர்.

e pass

இந்த நிலையில் இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளித்து சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் இன்று ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தற்போது இபாஸ் நடைமுறை எளிதானதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.  சென்னையில் இருந்து ஏராளமனோர்  சொந்த ஊர் செல்வதையும், ஏற்கனவே சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் சென்னைக்கு வருவதும் அதிகமாகி உள்ளது.