ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
3 மனைவிகள், 5 குழந்தைகள் இருந்தும் சோறு போட ஆட்கள் இல்லாமல் வியாபாரி தற்கொலை : குடியால் "குடி"யை இழந்த பரிதாபம்.!
குன்னம் அருகே 3 மனைவிகளை கொண்ட பானிபூரி வியாபாரி இறுதிக்காலத்தில் ஒருவேளை உணவு கொடுக்க ஆட்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்தார். மது என்ற கேடுகெட்ட பழக்கத்தால் மனிதனின் வாழ்க்கை தடம்மாறிய பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், கோவில்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் இராஜேந்திரன் (வயது 60). இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். மேலும், திருவிழா காலங்களில் உறவினர்களுடன் சேர்ந்து கூடுதல் கடை அமைத்தும் வருமானம் பார்த்து வருகிறார்.
இவருக்கு சகுந்தலா, செல்வி, சித்ரா என 3 மனைவிகள் உள்ளனர். மூவரையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசைக்கு, அந்தஸ்துக்கு, அழகுக்கு என ரகரகமாக திருமணம் செய்துள்ளார். இதில், செல்விக்கு மகன் - மகள் என 2 குழந்தைகள், சித்ராவுக்கு ஒரு மகன் இருக்கின்றனர்.
இவர்களுக்கும் தற்போது திருமண வயது நெருங்கி வரும் நிலையில், மதுபானத்திற்கு அடிமையான இராஜேந்திரன் கிடைக்கும் வருவாயை குடித்து அழித்து வந்துள்ளார். 3 மனைவிகளுக்கும் குடும்பம் நடத்த பணம் கொடுக்காமல் இழுத்தடித்த நிலையில், முதல் மனைவி சகுந்தலா கள்ளக்காதல் வயப்பட்டு வெளியேறினார்.
அதுமுதலாகவே இராஜேந்திரனை அவரின் பிற மனைவிகள் மற்றும் குழந்தைக வெறுக்க தொடங்கியுள்ளனர். முழுநேர போதையில் மிதந்துவந்த இராஜேந்திரனை யாருமே கண்டுகொள்ளாத காரணத்தால், ஒழுங்காக சாப்பிடாமல் குடித்து உடல்நலத்தை கெடுத்துள்ளார்.
இதனையடுத்து, வாழ்க்கையில் விரக்தியடைந்த இராஜேந்திரன் குன்னத்தில் உள்ள மதுபானக்கடையில் மதுவாங்கி விஷம் கலந்துகுடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மயங்கி கிடந்த இராஜேந்திரனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.