ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இருசக்கர வாகனம் - லாரி மோதி பயங்கர விபத்து; விவசாய பரிதாப பலி.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பேரளி தெற்கு தெருவில் வசித்து வருபவர் கருணாநிதி. இவரின் மகன் பிரபாகரன் (வயது 38).
விவசாயியாக பணியாற்றி வரும் பிரபாகரன், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து பெரம்பலூர் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார்.
அச்சமயம் கல்பாடி - உறையூர் சாலையில் டிப்பர் லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த காவல் துறையினர், பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.