திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாட்டுக்கு புல் அறுக்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்; அறுந்து கிடந்த மின்கம்பியால் சோகம்.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம், தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 61).
இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அவ்வப்போது அவைகளுக்கு புற்களை அறுத்து வந்து வீட்டில் போடுவார். பிற நேரங்களில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.
இந்நிலையில், இன்று காலை 09:45 மணியளவில் மாட்டிற்கு புல் அறுப்பதற்கு, இராமகிருஷ்ணன் என்பவரின் கிணற்றுப்பகுதி அருகே சென்றுள்ளார்.
அங்கு மின்கம்பி அறுந்து தொங்கிய நிலையில், அதனை காணாது வயரின் மீது கால் வைத்தவர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.