திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா.! அவருடன் பயணித்த இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி.!
உலகத்தையே அச்சுறுத்திய கொரோனாவால் உலகின் பல நாடுகளில் பலர் பலியாகினர். தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தபிறகு மக்கள் முன்பு போல பயம் இல்லாமல் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விழாக்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எம். பிரபாகரனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், எம்.எல்.ஏ பிரபாகரனின் உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.