ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.. சொத்துக்காக பெற்ற தாயையே அடித்து கொலை செய்த கொடூர மகன்.!
அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் வசித்து வருபவர்கள் கோடீஸ்வரராவ் - வெங்கடசுப்பம்மா தம்பதியினர். இவர்களுக்கு 2மகன்கள் உட்பட 3 மகள்கள் உள்ளனர். இவர்களின் இளைய மகனான முரளி கிருஷ்ணா என்பவர் தனக்கான சொத்துக்களை பிரித்துக் கொடுக்குமாறு தனது பெற்றோரை நீண்ட காலமாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தனது பெற்றோரிடம் சொத்து விவகாரமாக தகராறு செய்துள்ளார். அப்போது முரளி கிருஷ்ணாவுக்கும் அவரது பெற்றோருக்கும் கடும் வாக்குவாதம் எழவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முரளி கிருஷ்ணன் தனது பெற்றோரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர்கள் அலரி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெங்கடசுப்பம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் முரளி கிருஷ்ணாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சொத்துக்காக பெற்ற தாயை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.