மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் வேதனை அடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவந்தனர்.
இந்நிலையில் 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிது சிறிதாக குறைந்ததால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பெட்ரோல் விலை அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில் இந்நிலையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து ரூ.73.11க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 67.98க்கும் விற்பனை செய்யப்படுகிறது.