#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதற்க்கு ஒரு முடிவே இல்லையா.? தமிழகத்தில் சதம் அடிச்ச பெட்ரோல் விலை.! கடும் வேதனையில் வாகன ஓட்டிகள்.!
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில், பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இந்த வருடத்தில் பெட்ரோல் விலை உச்சகட்டமாக உயர்ந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் ரூ.100-ஐக் கடந்தது.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.13 ரூபாய்க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமின்றி லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா நெருக்கடி காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.