காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
137 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு.! கடும் வேதனையில் வாகன ஓட்டிகள்.!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல்- டீசல் விலை உச்சகட்டத்தை நெருங்கி பெட்ரோல் விலை ரூ.110 வரை உயர்ந்து, டீசல் விலையும் ரூ.100ஐ நெருங்கியது.
இதனையடுத்து மத்திய அரசு பெட்ரோல் - டீசல் மீதான வரியை குறைத்ததையடுத்து அவற்றின் விலை சற்று குறைந்தது. அதன்படி இந்தியாவில் கடந்த 136 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.