3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை.! வாகன ஓட்டிகள் பேரதிர்ச்சி.!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது.
ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த வருடத்தில் பெட்ரோல் விலை உச்சகட்டமாக உயர்ந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் ரூ.100-ஐக் கடந்தது. தமிழகத்திலும் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்க உள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 97.91 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 92.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 23 காசு அதிகரித்து ரூ.98.14க்கும், ஒரு லிட்டர் டீசல் நேற்றைய விலையில் இருந்து 27 காசு அதிகரித்து ரூ.92.31க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.