இதற்க்கு ஒரு முடிவே இல்லையா.? பல மாநிலங்களில் சதம் அடிச்ச பெட்ரோல் விலை.! தமிழகத்தில் இன்றைய விலை நிலவரம்.!



petrol-diesel-price-increased-nwj8zt

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. அந்தவகையில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 

இந்த வருடத்தில் பெட்ரோல் விலை உச்சகட்டமாக உயர்ந்து பொதுமக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது. தமிழகத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்க உள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பே ரூ.100-ஐக் கடந்தது. 

petrol

சென்னையில் இன்று பெட்ரோலின் விலை நேற்றைய விலையிலிருந்து 25 காசுகள் உயர்ந்து ரூ.97.19ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசலின் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.91.42 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரொனோ காலத்தில் மக்கள் பயங்கர நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது