திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆகா.. சூப்பர்.! அதிரடியாக குறைந்த பெட்ரோல் விலை.! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி.!
தமிழகத்தில் பெட்ரோலின் விலை குறைவு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என வாகன ஓட்டிகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.
பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்கப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.