ஒரேநாளில் வெளுத்துவாங்கிய கனமழை.. 24 பேர் பரிதாப பலி..!



Philippians Megi Storm 24 DIed

மேகி சூறாவளி காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் அதிகளவு புயல் தாக்குவது இயல்பான ஒன்று. ஆனால், அதனால் பெரும் அழிவுகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் அங்குள்ள தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் மேகி சூறாவளி தாக்கியது. 

இந்த சூறாவளி காரணமாக அங்குள்ள பல நகரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழையும் வெளுத்து வாங்கியது. பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்றவையும் ஏற்பட்டன. மேலும், நகரின் மின் இணைப்புகள் மற்றும் சாலை போக்குவரத்து போன்றவை துண்டிக்கப்பட்டன. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Philippians

அங்குள்ள லெய்டி மாகாணத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்ட நிலையில், இயற்கை சீற்றத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளோரை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.