மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. உடற்கல்வி ஆசிரியர் கைது.!
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டவளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர் சிங். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சுந்தர் சிங் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.