திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நான் வெற்றிபெற்றால் முதலில் இதை தான் செய்வேன்.! பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த்.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், விருத்தாசலம் சட்ட மன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி கட்சி சார்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலத்தில் தங்கி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், பிரேமலதா விஜயகாந்த் நல்லூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்றால் விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டம் ஆக்குவது தான் என் முதல் வேலை" என தெரிவித்தார். பிரேமலதா விஜயகாந்த் அவ்வாறு கூறியதும் பலத்த கரவோசை எழுந்தது.
தொடர்ந்து பேசிய தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகும் போது நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். நான் வெற்றியடைந்த பின் விருத்தாசலம் தொகுதிக்கு சிறப்பான வசதிகளை செய்து தருவேன் என தெரிவித்தார்.