ஷாப்பிங்மால்களில் கெத்தாக கார்டு தேய்பவர்களே!! மறவாதீர்கள் நீங்கள் உடலுக்கும், தமிழனுக்கும் செய்யும் துரோகத்தை!!



please keep all peoples


தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் ஆதனக்கோட்டை எனும் சிற்றூர் உள்ளது. அந்த ஊரில், முந்திரி உற்பத்தியும், முந்திரிக் கொட்டை உடைத்து பருப்பு பிரிப்பதும் இங்கு பிரதானமாக சாலை ஓரங்களில் நடக்கும் தொழில்கள் ஆகும்.

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் 12- 15 கீற்றுக் கொட்டகை கடைகள் போடப்பட்டிருக்கும். அங்குள்ள ஒவ்வொரு கடைகளிலும் அவர்களது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

thamilars 

பொதுவாக முந்திரியை ஆலையில்தான் உடைப்பாங்க. ஆனால் ஆலையில் உடைக்கும் முந்திரியில் உள்ள பால் அப்படியே இருக்கும். ஆனால், நாங்கள் இங்கு நேரடியாக வறுத்து எடுக்கும்போது, அதில் உள்ள பாலைத் தனியாப் பிரிச்சு எடுத்துடுவோம். அதனால், முந்திரி எத்தனை நாளானாலும் கெடாது, நிறம் மாறாது. அத்தோடு உடம்புக்கு எந்தக் கெடுதலும் செய்யாது நாங்கள் பிரித்தெடுக்கும் முந்துரி பருப்பில் தனி நறுமணம் வரும் என கூறுகின்றனர் அப்பகுதி கடைக்காரர்கள்.

அவர்கள் முந்திரி கொட்டையை சூடாக உடைத்தால் தான், முழுப் பருப்பாக உடையாமல் கிடைக்கும். கொஞ்சம் ஆறிப்போனாலும் பருப்பு தூளாக போய்விடும்.  அதனாலதான், வறுத்துக் கொட்டிய உடனேயே வேகவேகமா உடைக்க ஆரம்பித்துவிடுவார்கள். 

thamilars

அவ்வாறு அவர்கள் உடைக்கும்போது கையிலமுந்திரிப்பாலு பட்டு வெந்துவிடும். மேலும் அவர்களுடைய கையின் நிறம் அப்படியே கறுத்துப் போயிடும். ஆனால் இன்றைய விலைவாசியில் ஒரு மூட்டை முந்திரி கொட்டை வாங்கி உடைச்சா, 20 கிலோ பருப்புதான் முழுசா தேறும். ஆனால் செலவு போக ஒரு மூட்டைக்கு 
1,000 - 2000 வரை தான் நிக்கும்.

இந்த துறையில் இன்னொரு விஷயம். அதிகளவில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து முந்திரி இறக்குமதி செய்யப்படுகிறதாம். அவை ஒரு மூட்டைக்கு இரண்டு கிலோ பருப்பு அதிகமாக கிடைக்குமாம். பருப்பும் சற்று பெரிதாக, பார்க்க முழு வெள்ளையாகவும் இருக்குமாம். ஆனால் இந்தியாவில் விளையும் பருப்பிற்கே தரம் அதிகம் ஆகும்.

thamilars

எனவே ஷாப்பிங்மால்களில் கார்டு தேய்த்து அயல்நாட்டு பொருட்களை வாங்கி, உடலுக்கு தீமையை ஏற்படுத்திக்கொள்ளும் மக்கள், சத்துள்ள தூய்மையான பருப்புகளை நேரடியாக தயாரித்து விற்கும் விற்கும்  சாலையோரத்தொழில்களுக்கு கால் தேய்ந்து நிற்போம். உடல் ஆரோக்கியத்திற்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், உண்மையான உழைப்பாளி தமிழன் முன்னேறுவான்.