#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விடுதியில் இருந்து வீடு திரும்பிய ப்ளஸ்-டூ மாணவி தூக்குப் போட்டு தற்கொலை! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சந்தைதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சிந்துஜா (16). இவர் கடலூர் பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், கடந்த 8 ஆம் தேதி மாணவி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதற்கிடையே நேற்று மாலை வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்ற மாணவி சிந்துஜா நீண்டநேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவியின் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அறையினுள் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய படி சிந்துஜா கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிந்துஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாணவியின் தற்கொலை குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர், மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.