மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: பா.ம.க நிறுவனர் இராமதாசுக்கு கொரோனா... அதிகாரபூர்வ தகவல்., சோகத்தில் தொண்டர்கள்..!
மருத்துவர் இராமதாசுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் இராமதாஸ், தமிழகத்தின் தவிர்க்க இயலாத அரசியல் தலைவர்களுள் முக்கியமானவர்.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் வசித்து வரும் மருத்துவர் இராமதாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.#CovidVaccine
— Dr S RAMADOSS (@drramadoss) July 13, 2022
இதுகுறித்து இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், "நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.