மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் முந்திரி தோப்பில் பெண்களுடன் மது விருந்து மற்றும் ஆபாச நடனம்! சுற்றி வளைத்த போலீசார்!
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் அருகே ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ரிசார்ட், ஹோம்ஸ்டே, குடில்கள் என பல்வேறு பெயர்களில் இவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில விடுதிகளில் டி.ஜே. எனப்படும் கேளிக்கை நடனம் நடத்தப்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர மது மற்றும் போதை மருந்துகள் விற்கப்பட்டதாகவும், போதை அதிகமாகி அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி அதுபோன்ற ஆபாச நடனங்களை நடத்த தடை விதித்தனர்.
ஆனால் அப்பகுதியான ஆரோவில் உள்ள சில முந்திரித் தோப்புகளில் அழகிகளின் நடனங்கள் ரகசியமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இரும்பை கிராமத்தை அடுத்த முந்திரி தோப்பில் நேற்று முன்தினம் இரவு மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் போட்டி போட்டு பதிவு செய்து கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் பல போலீசார்கள் நள்ளிரவில் கேளிக்கை நடனம் நடந்த இடத்தை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும், அங்கு நடனமாடிக் கொண்டிருந்த சிலர் உஷாராகி, தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.