மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இப்படி எறங்கிட்டாங்க..." செயின் பறிப்பில் சினிமா தயாரித்த தந்தை மகன் உட்பட 3 பேர் கைது.!
இருசக்கர வாகன வழிப்பறியில் ஈடுபட்டு அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் திரைப்படம் எடுத்து வந்த கும்பலை கோவில்பட்டி காவல்துறை கைது செய்துள்ள விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தன. இது தொடர்பாக தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி காவல்துறை அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடி மாவட்டம் பங்களா தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மனைவியும் முத்துமாரி என்பவர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். மேலும் கோவில்பட்டி ஏ கே எஸ் தியேட்டர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த வெள்ளத்தாயி என்ற பெண்ணிடம் இருந்தும் ஆறு பவுன் தங்கச் சங்கிலியை இந்த இரு சக்கர வாகன வலிப்பறி கும்பல் பறித்துச் சென்றிருக்கிறது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் பச்சையங்கோட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பீர்சா மகன் சனாவுல்லா(42), அவரது மனைவி ரசியா(38), மகன் ஜாபர் (19) ஆகியோரை கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பத்தோடு இணைந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் நகை படிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் வழிப்பறி மூலம் கிடைக்கும் பணத்தில் நான் அவன் தான் என்ற திரைப்படத்தை சனாவுல்லா தயாரித்து இருப்பதாகவும் இந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் அவரும் நடித்திருக்கிறாராம். இந்நிலையில் வழிப்பறி சம்பவத்தில் அவரும் அவரது குடும்பத்தாரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் திண்டுக்கல்லில் வசித்து வருவதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.