மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரவி வரும் கஞ்சா கலாச்சாரம்... கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்ற 2 பேர் கைது...!
பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.25 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பல்லாவரம் ரேடியல் ரோட்டில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே ஒரு கும்பல் சட்ட விரோதமாக கஞ்சா விற்பதாக தாம்பரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ஷாலினி மற்றும் சப்இன்ஸ்பெக்டர் தினேஷ் தலைமையில் அங்கு சென்ற காவல்துறையிர், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை சொய்தனர்.
அப்போது, இரண்டு பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்கள் இரண்டு பேரையும் பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில், அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியை சேர்ந்த கோலப்பள்ளி, சோம்பல் சின்னி (24) மற்றும் விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (25) என்று தெரிந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் 2.25 கிலோ கஞ்சா இருந்தது.
ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக கூறினர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு செல்போன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.