மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய விவகாரம்!. மாணவி மற்றும் மாணவரை தட்டி தூக்கிய போலீஸ்: சிதம்பரத்தில் பரபரப்பு..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் காந்தி சிலை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை உள்ளது சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல பேருந்துக்காக இந்த நிழற்குடையில் காத்திருப்பது வழக்கம்.
இந்த நிலையில், அந்த நிழற்குடையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டியுள்ளார். இதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த காட்சி தற்பொழுது வைரலாக பரவி சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காட்சிகளின் அடிப்படையில், சிதம்பரம் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் இருவரும் சிதம்பரம் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அந்த மாணவி சிதம்பரம் அருகேயுள்ள வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், மாணவர் வடகரிராஜபுறம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர் மற்றும் மாணவியை சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.