திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. தோட்டா தொழிற்சாலை நடத்தினாரா?



Police enquiry to dmk mla

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. இதயவர்மன் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தின் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு குமார் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் இவருக்கும், குமார் என்பவருக்கும் கடந்த மாதம் 11-ந்தேதி நிலத்தகராறில் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் சீனிவாசன் என்பவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயவர்மன் உள்பட இரு தரப்பையும் சேர்ந்தவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 11 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

dmk mla

எம்.எல்.ஏ. இதயவர்மன், காலாவதியான உரிமத்துடன் துப்பாக்கியை வைத்துள்ளார். மேலும்,  உரிமம் இல்லாத மற்றொரு துப்பாக்கியும் அவரிடம் இருந்தது. இதனையடுத்து இதயவர்மன் துப்பாக்கிகளுக்கு தோட்டாக்களை சட்டவிரோதமாக தயாரித்துள்ளதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து இதற்கான மூலப்பொருட்களையும், தோட்டாக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதயவர்மனுக்குச் சொந்தமான இடத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எம்.எல்.ஏ இதயவர்மன் தோட்டாக்கள் உற்பத்தி செய்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறைனரின் விசாரணை ஆவணங்கள், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோரின் மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் நாளை(வியாழக்கிழமை) தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.