டெல்லியில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்திய கில்லாடி வாலிபர்கள்: மதுரையில் மடக்கிப் பிடித்த ரயில்வே போலீசார்..!



police-have-arrested-two-persons-for-smuggling-cannabis

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர் 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

டெல்லியிலிருந்து மதுரைக்கு நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக கடத்தப்படுவதாக மதுரை ரயில்வே காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்று இரவு 12 மணி அளவில் சோதனை மேற்கொண்டனர்

நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான ரயில்வே காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்ட இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இருவரிடமும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அளித்த பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், அவர்கள் கொண்டுவந்த பைகளை காவல்துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் அவர்கள் கொண்டுவந்த பைகளில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

madurai

இதனையடுத்து 5 பைகளில் இருந்த சுமார் 60 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்துடன் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டதில் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த வாலி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கஞ்சா கடத்தலில் இவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்