திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து! கமல், ஷங்கருக்கு சம்மன்!போலீஸ் முடிவு!
கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பை வடமாநிலத்தில் முடித்துவிட்டு, தற்போது மீண்டும் சென்னையில் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் இரவு நடைபெற்று வந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்கும் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்தது. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைனா நிறுவனம் மீது ஏற்கனவே 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.