சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாம்பன் பாலத்தில் பலத்த பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்திய போலீசார்!
நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை களும் செய்யப்பட்டு வருகின்றன.
சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தின் அனைத்து விமானநிலையத்திலும் வாகன சோதனை மும்முரமாக நடத்தப்படுகிறது.
Rameswaram: Police personnel inspect the Pamban Bridge railway tracks as security has been heightened ahead of Independence Day#TamilNadu pic.twitter.com/fcZb5ZVK5F
— ANI (@ANI) August 13, 2020
சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் ஆளில்லா குட்டி விமானங்கள் (டிரோன்) மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.