மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர்... காவல்துறை அதிரடி ரெய்டு.!
சென்னையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த புரோக்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரியமேடு, வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த லாட்ஜிக்கு சென்ற காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட மூன்று பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல விபச்சார புரோக்கர் ஜப்பார் பூரி(31) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.