தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
100 ரூபாய் குவார்ட்டர் 400 ரூபாய்க்கு விற்பனை! மதுவை தேடி அலையும் குடிமகன்கள்! போலீசார் அதிரடி!
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சமூக விலகலை கடைபிடிக்க அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்ததால் அத்தியாவசிய தேவைகளான மளிகை மற்றும் காய்கறி கடைகள், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இயங்குகின்றன. சமூக விலகலுக்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனால் மது அருந்தும் பலர் மதுக்கடை எப்போது திறக்கப்படும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் மூடியதை பயன்படுத்திக்கொண்டு, பலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு அதிகப்படியான விலைக்கு விற்று வருகின்றனர். மது விற்பனையும் ஹாலிவுட் படத்தில் நடக்கும் கடத்தல் செயல் போலவே, பணம் ஒருவரிடம் கொடுத்தால் சரக்கு இன்னொருவர் இடம்தேடி வந்து கொடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. மதுவை எந்த அளவுக்கு விலை உயர்த்தி விற்றாலும் அதனை வாங்குவதற்கு குடிமகன்கள் அலைமோதி திரிகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் சட்ட விரோத செயல்கள் எங்கு நடைபெற்றாலும் 7293911100 என்ற எண்ணிற்கு வாட்சப்பிலோ அல்லது போன் செய்து புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சட்டவிரோதமாக சிலர் மதுவிற்பனையில் ஈடுபடுவதாகவும், 120 ரூபாய் மதிப்புள்ள குவார்ட்டர் 400 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு மதுவிற்பவர்களை தேடி வருகின்றனர். அதேபோல் நேற்று ஆலங்குடி ஆண்டிகுளத்தில் மது விற்பனை செய்த இருவரை போலீசார் சுற்றி வளைத்து கைதுசெய்தனர்.