மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி பட்டறையில் செல்போன் திருடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.!
அரூர் அருகிலுள்ள செல்லம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவர் அதே பகுதியில் லாரி பட்டறை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பாபு வழக்கம்போல் பட்டறையில் பழுது பார்க்க வந்த லாரியை பழுது பார்த்து கொண்டிருந்தார். இதனையடுத்து பாபு அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு பட்டரைக்கு வந்துள்ளார். அப்போது லாரியில் வைத்திருந்த தனது செல்போன் காணாமல் போனதை கண்டறிந்த பாபு அதிர்ச்சியடைந்து அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபரை கண்டறிய அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.