மது போதையில் தொழிலாளியை வெட்டிய ஆசாமி.. போலீசார் அதிரடி நடவடிக்கை!



Police shoot accused in nellai

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த தென்திருப்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் பேச்சுதுரை. இவர் மீது கொலை, அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நேற்று மது பாதையில் தனது நண்பர் சந்துரு என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

nellai

அப்போது அங்கிருந்த தொழிலாளியை கருப்பசாமி இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேச்சுதுரையும், சந்திருவும் சேர்ந்து கருப்பசாமியை அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த வெங்கடேஷ் என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் தப்பித்து சென்றுள்ளனர்.

இதனிடையே அரசு பெருந்தை வழிமறித்து கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் இருவரையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது, காவலர் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு வாழைத்தோட்டத்தில் பதுங்கினர்.

nellai

அப்போது அவர்களை சுற்றி வளைத்த போலீசார் பேச்சித்துரையை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். இதில் சந்துரு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேச்சுத்துரையை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.