காதலிக்க மறுத்த சிறுமி கொலைமுயற்சி.. நடுரோட்டில் பயங்கரம்.. தலைதெறிக்க ஓடிய ஒரு(தறு)தலைக்காதலன்.! தறுதலை



Pondicherry Minor Girl Murder Attempt by One Side Lover Police Investigation

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திப்பராயப்பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த சிறுமியை வம்பாகீரப்பாளையம் பகுதியில் வசித்து வரும் மதுரைமுத்து என்பவரின் மகன் முகேஷ் (வயது 22) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

கயவன் முகேஷ் தனது காதலை சிறுமியிடம் கூறி காதல் வலையில் வீழ்த்த திட்டமிட்டு இருந்த நிலையில், சுதாரிப்புடன் இருந்த சிறுமியோ காதலை ஏற்க மறுத்து கண்டித்து இருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவில் சிறுமி செஞ்சி சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார்.

Pondicherry

அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து வந்த முகேஷ், எதற்காக என்னை காதலிக்காமல் செல்கிறாய்? உன்னை கொலை செய்கிறேன் பார்., என்று கூறி சிறுமியின் தலையை பிடித்து சுவரில் மோதவைத்து பலமாக தாக்கி இருக்கிறார். மேலும், திட்டமிட்டு எடுத்து சென்ற கத்தியை வைத்து குத்தவும் முயற்சித்துள்ளார். 

சிறுமி கயவனுடன் எதிர்ப்பு போராட்டம் நடத்தி அலறவே, பொதுமக்கள் பதறியபடி திரண்டு வந்துள்ளனர். மக்கள் கையில் சிக்கினால் அடி நொறுக்கிவிடுவார்கள் என்று பதறிப்போன சில்வண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் முகேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.