மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவில் சிக்கன் ரைஸ், பரோட்டா சாப்பிட்ட சாப்ட்வேர் எஞ்சினியர் பரிதாப பலி.. கண்ணீரில் கதறிய குடும்பத்தினர்.!
வெளியே சென்றுவிட்டு பரோட்டா, சிக்கன் ரைஸ் வாங்கி வீட்டிற்கு வந்து சாப்பிட்ட சாப்ட்வேர் எஞ்சினியர் உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர், ஆரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 32). இவர் சென்னையில் செயல்பட்டு வரும் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
கொரோனா காலத்திற்கு பின் வீட்டில் இருந்தவாறு வேலை பார்த்து வந்தவர், தனது மனைவி சுகந்தியோடு சம்பவத்தன்று புதுச்சேரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இரவு நேரமாகிவிட்டதால் சமைக்க வேண்டாம் என்று எண்ணிய சத்தியமூர்த்தி, சுல்தான்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கடையில் பரோட்டா, சிக்கன் பிரைடு ரைஸ் வாங்கியுள்ளனர்.
இருவரும் உணவை சாப்பிட்டு உறங்கிய நிலையில், மறுநாள் காலையில் சத்யமூர்த்தி பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். கணவர் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி அலறியுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சத்தியமூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, அங்கு மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இரவு உணவால் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் சத்தியமூர்த்தியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.