மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சோகம் : தீர்த்தக்கிணற்றில் தவறி விழுந்து 12 வயது சிறுமி பரிதாப பலி.!
சனீஸ்வரர் கோவிலில் இருக்கும் தீர்த்தக்கிணற்றில் தவறி விழுந்த 12 வயது சிறுமி பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
சனீஸ்வர பகவானுக்கு திருத்தலமாக கருதப்படும் திருநள்ளாறில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், ஆத்திர பிரதேசம் மாநிலத்தில் வசித்து வருபவர் சக்கரபாணி.
இவர் தனது குடும்பத்தினருடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருநள்ளாறுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடிக்கொண்டு இருந்தபோது, சக்கரபாணியின் மகள் கீர்த்தனா (வயது 12) கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு துடிதுடித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சிறுமியை மீட்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், அவர் பதற்றத்தில் கிணற்றுக்குள் இருந்த நீரை அதிகளவு குடித்து நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக பலியாகினார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.