மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீறிவந்த காளை, உரிமையாளரை பார்த்ததும் குழந்தைபோல் மாறிய காட்சி!! வைரல் வீடியோ..
தனது உரிமையாளரை பார்த்ததும் குழந்தைபோல் நின்ற ஜல்லிக்கட்டு காளையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழகத்தில் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டநிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், இரண்டு தடுப்பூசி செலுத்திய வீரர்களை மட்டுமே அனுமதித்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்துவருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த நிகழ்வு ஒன்றின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. குறிப்பிட்ட வீடியோவில், ஜல்லிக்கட்டு காளை ஒன்று வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வெளியே வருகிறது.
மாடு பிடி வீரர்களின் கையில் சிக்காமல் ஓடிவந்த காளை, சற்று தூரம் வந்ததும் தனது உரிமையாளர் நிற்பதை பார்க்கிறது. உடனே தனது தலையை கீழே தொங்கப்போட்டு, குழந்தைபோல் மாறி அதே இடத்தில் நிற்கிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.