மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 1000 வழங்கப்படும்... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் 1 முழு கருப்பு வழங்கப்படும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 1000 குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாது இருந்த வந்தது.
இந்நிலையில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 1000 குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர். அதன்படி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர மற்ற அனைத்து அட்டைக்காரர்களும் ரூ 1000 வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த இலவச வேட்டி சேலையும் பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரேஷன் அட்டைகாரர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.