'டேய்., கீழ்த்தனமான அரசியல் வேண்டாம்' பிரகாஷ் ராஜ் மீது பாய்ந்த கடுமையான விமர்சனம்!!
கடந்த 17-ஆம் தேதி அன்று நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருந்த சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான கட்டத்தை மேற்கொண்டது.
இதில், விக்ரம் லேண்டர், விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்து, நிலவின் முதல் படங்களை பகிர்ந்திருந்தது. அதன் பின் கடந்த 18-ந்தேதி அன்று விண்கலத்தில் இருந்து பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, நேற்று அதிகாலை 2 மணியளவில் லேண்டரின் சுற்றுவட்டப்பாதையானது இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி அன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் "நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம் இது என்று பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் அவரை டேக் செய்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில்:- "டேய் @prakashraaj உனக்கெல்லாம் நமது விஞ்ஞானிகளின் பல வருட கனவு காமெடியா இருக்கு தானே. எந்த நாடும் செய்ய முடியாததை இந்தியா செய்யும் போது இப்படி வன்மம் ஆகாது செல்லம். அரசியல் செய்ய ஆயிரம் வழி இருக்கு அதை விட்டு இப்படி கீழ்த்தனமா வேண்டாம்" என்று கடுமையாக விமரிசித்து பேசியுள்ளார்.