மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும்சோகம்.. கர்ப்பிணியின் மீது மோதிய டிராக்டர்..! குழந்தையும், தாயும் துடிக்க துடிக்க நடந்த பயங்கரம்..!!
இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியதில் 7 மாத கர்ப்பிணி மற்றும் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அடுத்த தானகவுண்டம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 30). இவரது மனைவி மணிமேகலை (வயது 25). இவர்களுக்கு ஒன்றரை வயது துரைமணி என்று குழந்தை உள்ள நிலையில், மணிமேகலை தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜதுரை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தார். இவர்கள் முத்தனூர் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் ராஜதுரை படுகாயமடைந்த நிலையில், குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளது. மேலும் உயிருக்கு போராடிய நிலையில், மீட்கப்பட்ட கர்ப்பிணி மணிமேகலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்த நிலையில், துணை காவல் ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.