#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கறிவிருந்து கொடுத்த கர்ப்பிணி பெண்ணிற்கு காட்டுப்பகுதியில் நடந்த பயங்கரம்! வெளியான உறவினர்களின் கொடூரம்!
திருப்பத்தூர் மாவட்டம் சுட்டகுண்டா பகுதியில் வசித்து வந்தவர் மகேஸ்வரன். அவர் தற்போது பெங்களூரில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி ரேவதி. கர்ப்பிணியான அவர் தனது கணவர் வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது வீட்டிற்கு அவரது உறவினர்களான சித்ரா மற்றும் செல்வராஜ் இருவரும் வந்துள்ளனர்.
அவர்கள் ரேவதியை நலம் விசாரித்த நிலையில் மிகவும் மகிழ்ச்சியாக ரேவதி வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு கறிகுழம்பு வைத்து விருந்தளித்துள்ளார். அங்கு நன்றாக சாப்பிட இருவரும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ரேவதிக்கு போன் வந்துள்ளது. மேலும் தனது வீட்டில் சரியாக சிக்னல் கிடைக்காத நிலையில் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று பேசியுள்ளார்.
இந்நிலையில் போன் செய்ய சென்ற ரேவதி வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர்கள் பதறிப்போய் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். இந்நிலையில் ரேவதி சடலமாக அங்கிருந்த மலையடிவாரத்தில் கிடந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்ட அவர்களுக்கு வீட்டிற்கு வந்த சித்ரா மற்றும் செல்வராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டநிலையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். பின்னர் விசாரணையை தீவிரபடுத்தியதில் ரேவதி சிக்னல் கிடைக்காமல் வெளியே வந்தபோது அவரது முகத்தில் துணியை கட்டி அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் ரேவதி அணிந்திருந்த 10 சவரன் நகைகளை திருடிக்கொண்டு, அவரை கொலை செய்துள்ளனர். இதனை சித்ரா மற்றும் செல்வராஜ் ஒப்புக்கொண்ட நிலையில் போலீசார் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.