53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பிரசவத்திற்கு 6 KM மூங்கிலில் தூக்கிச் செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி! கலங்க வைக்கும் வீடியோ!
கடந்த 2016ம் அண்டு ஒரிசா மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தனது மனைவியின் சடலத்தை கணவர் தோளில் சுமந்தபடி மகளுடன் சாலையில் நடந்துச்சென்றது நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில் சாலை வசதி சரியாக இல்லாததால் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவரை அவர்களது உறவினர்கள் மூங்கில் கம்பில் துணி கட்டி 6 கிலோமீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட அந்த பெண்ணிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் உறவினர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Pregnant Women carried in bamboo cradle for 6 kms as ambulance refused to reach them because of bad roads deliver a boy and both doing fine in Erode. pic.twitter.com/HPGkBlixVD
— Mugilan Chandrakumar (@Mugilan__C) December 4, 2019