#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரசவ வலியால் துடிதுடித்த பெண்! 108 ஆம்புலன்ஸிலேயே நடந்த ஆச்சர்யம்! செவிலியருக்கு குவியும் பாராட்டுக்கள்!!
பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்சில் சென்று கொண்டிருக்கும்போதே கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. கர்ப்பமாக இருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளனர். பின்னர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் வந்துள்ளது.
ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் செவிலியர் முத்துலட்சுமிக்கு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி மிகவும் அதிகரித்தநிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். பின்னர் நர்ஸ் உமாமகேஸ்வரி வலியால் துடிதுடித்த முத்துலட்சுமிக்கு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸில் செல்லும்போதே பிரசவம் பார்க்க முடிவு செய்து பிரசவம் பார்த்துள்ளார்.
பின்னர் முத்துலட்சுமிக்கு ஆம்புலன்ஸிலேயே இரட்டை பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், இரு பெண் குழந்தைகளும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் பரிசோதனை மேற்கொண்ட பிறகுதான் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் திடீர் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணிற்கு தக்க சமயத்தில் பிரசவம் பார்த்த நர்ஸ் உமாமகேஸ்வரிக்கும், ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.