மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல வருட காதல் திருமணம்.. 5 மாத கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை!
திருமண நாளில் 5 மாத கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவியை சேர்ந்தவர் சக்திவேல் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சக்திவேல் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த பவானி என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சில மாதங்களுக்கு முன்பு இருவரையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது பவானி 6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த பவானியை, கணவர் சக்திவேல் நேற்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் தங்களது வீட்டில் திருமண நாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதனிடையே இவர்கள் இருவருக்கும் இடையே இரவு கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சக்திவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் பவானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் பவானியின் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.