திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? - உண்மையை உடைத்த பிரேமலதா விஜயகாந்த்: அதிரடி பேச்சு..!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் தொடர்பாக சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகள் உலாவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், செல்லும் இடமெல்லாம் கேப்டன் எப்படி இருக்கிறார்? என பலரும் கேட்கிறார்கள். அவர் சிறப்பாக இருக்கிறார். நம்முடன் 100 ஆண்டுகள் இருந்து, நம்மை வழிநடத்துவார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
எனக்கும் - அன்பு தொண்டர்களுக்கும் கடவுள் பதில் சொல்லியாக வேண்டும். நல்லவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இருக்க வேண்டும். வீழ்ந்ததாக சரித்திரம் இருக்க கூடாது.
கேப்டனை போன்றவர்கள் வாழ்ந்தாலே, அவரை பார்த்து மக்களில் 100 பேர் உதவி செய்வார்கள். கேப்டனின் நிலையை கண்டு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு பலரும் வருகிறார்கள்.
கேப்டன் நல்லவர், அவரின் இலட்சியம் நிச்சயம் வெல்லும். உங்களின் வாழ்த்துக்கள் அவரை 100 வயது வரை ஆகும். அப்பாவை போல விஜய பிரபாகருக்கும் பொய்சொல்ல தெரியாது. அதனை உடல்நிலை கொஞ்சம் தொய்வுடன் இருப்பதை குறிப்பிட்டார்.