திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பழைய ரூட்டில் உத்வேகமாகும் தேமுதிக.. பாக்கத்தானே போறீங்க.. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி.!
கரூரில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "மக்கள் கொரோனா பொதுமுடக்கத்தால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பல தொழில்களும் முடங்கியுள்ளன.
நிலைமை தற்போதுதான் மாறி வருகிறது என்ற தருணத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மேலும் இன்னலடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும்.
தேமுதிக இலங்கை தமிழருக்கு ஆதரவாக இருக்கும். நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. தற்போதைய சில மாணவர்களின் ஒழுங்கீன செயல்பாடுகள் எதிர்காலத்தை எண்ணி வருந்த வைக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேமுதிக முழுபலம் பெரும்" என்று தெரிவித்தார்.