53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தமிழ்நாடா? தமிழகமா?.. அசத்தல் பதில் அளித்து கவர்னருக்கு கண்டனம் கூறிய பிரேமலதா விஜயகாந்த்.!
தமிழை பற்றி அறியாதோர் கூறும் கருத்துக்களுக்கு நாம் செவிசாய்க்க தேவையில்லை என பிரேதமலதா பேசினார்.
மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "தமிழுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்.
தமிழ் குறித்து அவருக்கு என்ன தெரியும். 5 ஆண்டுக்காக இங்கு வந்து தமிழ் குறித்து பேசுகிறார் என்றால் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என பொருள். தமிழ்நாடும், தமிழகமும் ஒன்றே. அகம் என்றால் நாடு என பொருள்.
தமிழ் குறித்து தெரியாதவர் கூறும் கருத்தை எடுத்துக்கொள்ள தேவையில்லை. அரைவேக்காட்டுத்தனமாக ஆளுநர் கூறிய கருத்தை தேமுதிக கண்டிக்கிறது. ஆதார் அட்டை மூலமாக மக்களுக்கு சலுகை கிடைத்துக்கொண்டு இருக்கிறது.
வெளிமாநிலத்தவர்கள் பலரும் தமிழகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள். முதலில் அந்த தகவல் அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். செவிலியர்களுக்கு தேமுதிக எப்போதும் ஆதரவாக இருக்கும்" என்று பேசினார்.