திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திமுகவின் 100 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது.? நச்சுன்னு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த்.!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார். பின்னர் கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவின் 100 நாட்கள் ஆட்சி சாதகம், பாதகம் என எதையும் கூற முடியாது. நடுநிலையாக உள்ளது. இனி வருங்காலங்களில் என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும், அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது என தெரிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் குறித்த கேள்விக்கு, பொதுமக்களும் அர்ச்சகர்களும் இதனை ஏற்றுக் கொண்டால் நாங்களும் வரவேற்கிறோம் என்று பிரேமலதா தெரிவித்தார். மேலும், விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் அறிவித்தாலும் அதனை தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்ததாக பிரேமலதா தெரிவித்தார்.