மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி.. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சற்றுநேரத்தில் தொடக்கம்..!
இந்தியாவிலேயே முதல் முறையாக 40 வருடங்களை கடந்த பின்பு செஸ் போட்டிகள் நடைபெறுகிறது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு திறம்பட செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலமாக பிரதர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் உதவியுடன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு செல்கிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக பிரதமர் நரேந்திர மோடி செஸ் போட்டிகள் நடைபெறும் அரங்க நிகழ்வு மையத்திற்கு செல்கிறார். அதனைத்தொடர்ந்து, செஸ் போட்டிகள் அனைத்தும் தொடங்கப்படவுள்ளது. முன்னதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்திக் உட்பட பலரும் நேரில் சென்றுள்ளனர்.