மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் பெண் கேட்ட கேள்வியால் சலசலப்பு.! அங்கு நடந்தது என்ன? முழு விவரம்.!



problem-in-kirama-sabai-koottam

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எல்.இ.டி. பல்ப் மாற்றும் திட்டத்தில், அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஊழல் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு வைத்தார். மேலும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால், அரசியலை விட்டு விலகத் தயார் எனவும் குற்றச்சாட்டுகளை தான் நிரூபித்தால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசியலை விட்டு விலகத் தயாரா எனவும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் ஒருவர் கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீர்கள் என ஸ்டாலினிடம் கேட்டார். அப்போது, நீங்கள் எந்த ஊர் என அவர் கேட்டதைத் தொடர்ந்து மைல்கல் என பெண் கூறினார். இதைடுத்து, அது எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது என ஸ்டாலின் கேட்டார். ஆத்திரமடைந்த அந்த பெண் இது கூடத் தெரியாமல் தான் நீங்கள்  கிராமசபை கூட்டம் நடத்துகிறீர்களா எனக் கேட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

dmk

அப்போது, எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. நீங்கள் அமைச்சர் வேலுமணி அனுப்பி வைத்த ஆள் என தெரிவித்தார். பின்னர் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்க முயன்ற பெண் வெளியேற்றப்பட்டார். 

அந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்க முயன்ற பெண் அதிமுக மகளிர் பாசறை கோவை மாவட்ட துணைத் தலைவர் பூங்கொடி என்பது தெரியவந்தது. அதன்பின் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக நடத்தும் கூட்டத்தில் பெண் ஒருவர் மூலம் கலவரத்தை உண்டாக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். திட்டமிட்டு மக்கள் கிராமசபைக் கூட்டத்தை சீர்குலைக்க சதி நடப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். அந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்க முயன்ற பெண் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடந்த சம்பவத்தை அலைபேசியில் விவரிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.