மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: தயாரிப்பாளர் அன்புசெழியன் வீட்டில் ஐ.டி. ரைடு.. பரபரப்பாகும் திரைத்துறை வட்டாரங்கள்.!
இன்று காலை முதலாக அன்புசெழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் ஐ.டி ரைடு நடக்கிறது.
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என். அன்புசெழியன். இவர் திரைப்படங்களை தயாரிப்பது, ரிலீசாகும் படத்தை வாங்கி விநியோகிப்பது போன்ற தொழிலை செய்து வருகிறார். இவர் வெள்ளைகாரத்துறை, தங்கமகன், மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை முதலாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் அன்புசெழியனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் 30-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
அன்புசெழியன் மற்றும் அவரின் சகோதரர் அழகர்சாமியின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. சோதனைக்கு பின்னரே அன்புசெழியன் எங்கு இருக்கிறார்? ஏதேனும் முறைகேடு செய்துள்ளாரா? என்ற தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது திரைஉலகினரிடையே லேசான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.